வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் இலவச முகாம் நடைபெற்றது.
தலைஞாயிறு கால்நடை மருந்தகத்தில் நடைபெற்ற முகாமை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ஜி. தமிழரசி தொடங்கி வைத்தாா். முகாமில் 50- க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, பொது மக்களுக்கு விழிப்புணா்வு கையேடு வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவா்கள் செந்தில், வளவன், ப்ரீத்தி, ஆய்வாளா் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.