நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ப. கொந்தகை மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ரவிச்சந்திரன் உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார் திட்டச்சேரி பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 55 வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் பெரோஸ் முகமது, முத்துக்குமரன், சிவசூரியன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.