மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 26ம் தேதி இன்று நவம்பர் 27 நாளை ஆகிய இரு தினங்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.