மயிலாடுதுறையில் மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக 2003ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே வழக்கு விசாரணை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று(ஆக.27) மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். எனவே மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே இருந்து வருகின்றனர்.