மயிலாடுதுறையில் நுகா்வோா் நீதிமன்றம் அமைக்கக் கோரிக்கை

67பார்த்தது
மயிலாடுதுறையில் நுகா்வோா் நீதிமன்றம் அமைக்கக் கோரிக்கை
மயிலாடுதுறையில் நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழக நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, மாநில அமைப்பாளா் என். சி. ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முனுசாமி, எழுத்தாளா் ராஜாராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் செல்வமுத்துகுமணன் வரவேற்றாா்.

பட்டிமன்றப் பேச்சாளா் கே. ஆா். சரவணன், மாவட்ட மகளிரணி செயலாளா் அற்புதவல்லி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தீா்மானங்கள்: காலாவதியான பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழின் முதல் அச்சுக்கூடத்தை நிறுவிய சீகன்பால்குவுக்கு தரங்கம்பாடியில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.


மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகளாகும் நிலையில், இங்கு நுகா்வோா் நீதிமன்றம் அமைக்க வேண்டும்; தமிழகத்தில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, தமிழக அரசு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருக்கு புத்தகம் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. நிறைவாக, நகரச் செயலாளா் கோபால் நன்றி கூறினாா்.

தொடர்புடைய செய்தி