நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி தெற்குத்தெருவில் உள்ள நாவுச்சா குளத்தில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தில் படித்துறை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்ததால் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இதனை அடுத்து அந்த இடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்து குளத்தை சுற்றி தடுப்புச்சுவரும், படித்துறையும் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், அதிமுக நிர்வாகி நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.