மதுரை மாவட்டம் திருமங்கலம் சின்ன செங்குளத்தை சேர்ந்தவர் சாமிதேவர் மனைவி திருப்பதி(54) என்பவர் நேற்று மாலை குளத்தில் குளித்து விட்டு வடகரை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செயின் பறித்த பெருங்குடியை சேர்ந்த மாரிமுத்து மகன் கருமலை(24) என்பவரை திருமங்கலம் போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.