மதுரை மாவட்டம் திருமங்கலம் மேற்கு மாவட்டத்தில் நடந்த பா. ஜ. , உறுப்பினர் சேர்க்கை குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா தலைமையில் திருமங்கலத்தில் நேற்று (அக். 3) நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளரின் சுற்றுப்பயண பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி முன்னிலை வகித்தார்.
உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை தீவிரப்படுத்துவது, அதற்கான தேசிய தலைமையின் வழிக்காட்டுதல்கள் குறித்த விபரங்களை எடுத்துரைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் சரவணகுமார், பொறுப்பாளர்கள் சோலை மணிகண்டன், உதயச்சந்திரன், சோமசுந்தரம், நவீன் குமார், பார்வையாளர் கஜேந்திரன் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.