ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி கோயிலில் சிறப்பு வழிபாடு

84பார்த்தது
ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி கோயிலில் சிறப்பு வழிபாடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என கூறி ரஜினி ரசிகர்கள் பல்வேறு வேண்டுதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரஜினி பெயரின் மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது ஏராளமான ரசிகர்கள் மனமுருக வழிபட்டனர்.

பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் வழிபட வந்த ஏராளமான பக்தர்களுக்கு ரஜினி விரைவில் பூரண குணமடைய வேண்டியும், லதாரஜினிகாந்தின் மாங்கல்ய பாக்கியத்திற்காகவும் ரஜினி ரசிகர்கள் மாங்கலயம் அடங்கிய பிரசாத பைகளை வழங்கினர்.

மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி