சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆஜராக வேண்டும் எனவும் பொன்முடிக்கு நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.