குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியாவின் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் ஏர் இந்தியா விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதை சரிசெய்ய பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட் விலையை அந்நிறுவனம் தற்போது குறைத்துள்ளது. குறிப்பாக போயிங் 787 ரக விமானங்களின் டிக்கெட் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.