உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் கோவில் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மாதம்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (செப்.,30) மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில் மற்றும் முக்தீஸ்வரர் திருக்கோயில், செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி திருக்கோயில் உட்பட 11 உபகோயில்களின் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உபகோயில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 165ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தங்கம் 455கிராம், வெள்ளி 649 கிராமும் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 398ம் கிடைக்க பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.