மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி செந்தமிழ் நகா் புது டிவிஎஸ் நகரைச் சோ்ந்தவா் செந்தில்வேல் (50). இவா் அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை தனது உறவினா்களை அழைத்து புதுமனை புகுவிழா நடத்தினாா்.
நிகழ்ச்சி முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சரிபாா்த்தபோது, அதில் 8 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.