'தீபாவளி, ஆயுத பூஜையை முன்னிட்டு அக். , நவ. , மாதங்களில், 302 பயணங்களுடன் 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதில், 268 பயணங்கள் அடங்கிய, 28 சிறப்பு ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. இச்சிறப்பு ரயில்கள் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள பயணியரும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருவனந்தபுரம், பாலக்காடு பயணியரும் கூடுதலாக பயன்பெறும் வகையில் இயங்கும்.
பண்டிகை மாதங்களில் கடைசி நேர நெரிசல், காத்திருப்பு பட்டியலை தவிர்க்க, பயணியர் முன்கூட்டியே டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும். சிறப்பு ரயில்களின் விரிவான அட்டவணைகள், வழித்தடங்கள், நேரங்கள் ஆகியவை தெற்கு ரயில்வே இணையதளம், ஐ. ஆர். சி. டி. சி. , இணையதளங்களில் உள்ளன.