அலங்காநல்லூர்: பெயிண்டர் கொடூரமான முறையில் கொலை

55பார்த்தது
அலங்காநல்லூர்: பெயிண்டர் கொடூரமான முறையில் கொலை
அலங்காநல்லூர் அருகே பெயிண்டர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் கோவில்பாப்பாகுடி சின்ன கண்மாய் தெருவை சேர்ந்த நாகமுத்து (36), என்பவர் பெயின்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் (செப்.,29) இரவு வீட்டின் அருகே கழுத்தில் வெட்டப்பட்டு, முகத்தை எரித்து கொலை செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் (செப்.,29) மாலை ஹரிஹரன் (18) என்பவர் தனது தந்தை வெண்மணியுடன் போதையில் தகராறு செய்தபோது போதையில் வந்த நாகமுத்து, ஹரிஹரனை கண்டித்து அனுப்பியுள்ளார். இதில் ஏற்பட்ட முன் விரோதத்தால் இக்கொலை நடந்துள்ளது. போலீசார் ஹரிஹரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன் சமயநல்லுார் அருகே அம்பலத்தடியில் நடந்த கொலை வழக்கில் கைதான ஹரிஹரன் சமீபத்தில் ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி