பாசிங்கபுரத்தில் திமுகவினர் ஆலோசனை.

63பார்த்தது
பாசிங்கபுரத்தில் திமுகவினர் ஆலோசனை.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அமைச்சர் தலைமையில் திமுகவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் , அமிர்தம் மஹாலில் மதுரை வடக்கு மாவட்டம் மேற்கு ஒன்றியம் பொது உறுப்பினர் கூட்டம் இன்று (செப் 6) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் 16. 8. 2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பிறகு அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்து அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி