
குந்தாரபள்ளி: யானைத் தந்தங்கள் விற்க முயற்சி; 4 பேர் கைது
கிருஷ்ணகிரி பகுதியில் யானைத் தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்தது. இதனை அடுத்து குந்தாரப்பள்ளி பகுதியில், கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் தலைமையில் அடங்கிய குழுவினர் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற சூளகிரியை சேர்ந்த நரசிம்மன் (40), பழையபேட்டை நந்தகுமார் (45), கட்டிகானப்பள்ளி பால் அந்தோணிராஜ் (63), சூளகிரியை சேர்ந்த மற்றொரு நரசிம்மன் (32) ஆகிய நான்கு பேரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 400 கிராம் எடையுள்ள யானைத் தந்தத் துண்டுகள் மீட்கப்பட்டன.