கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்குப்பம் அருகே பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுடர்வளவன் (30). ஊத்தங்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாதேஷ்குமார் (50) தொழிலாளி.
நேற்று முன்தினம் (அக்-1ம் தேதி) அன்று ஊத்தங்கரை திருவண்ணாமலை சாலையில் ஆசிரியர் நகரில் உள்ள பெட்டிக்கடையில் ஏற்பட்ட பிரச்சினையில் சுடர்வளவனை மாதேஷ்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுடர்வளவன் அளித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாதேஷ்குமாரை கைது செய்தனர்.