கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை போலீசார், கேத்துநாயக்கன்பட்டி அருகே நேற்று (செப்-30) ரோந்து பணியில் ஈடுபட்னர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது விற்பனைக்காக வைத்திருந்த 10 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளரான மாது என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.