ஊத்தங்கரை: பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
ஊத்தங்கரை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கரவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பால் சொசைட்டி முன்பு பாலுக்கான கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கரவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்டச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலுக்கான கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி, பசும்பால் ஒரு லிட்டருக்கு 45 ரூபாயும், எருமைப்பால் ஒரு லிட்டருக்கு 54 ரூபாயும் நிர்ணயம் செய்ய வேண்டும், ஆரம்ப சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும், 

இதற்கான தொகையில் 50 சதவீதத்தை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும், தற்போது தமிழகத்தில் பால் கொள்முதல் செய்வதற்கு எம்.ஆர்.எப் விற்பனை ஐ.எஸ்.ஐ பார்முலாவை பயன்படுத்துகிறது, இதர மாநிலங்களில் செய்வது போல் கொள்முதலுக்கும் விற்பனைக்கும் ஐ.எஸ்.எப் பார்முலாவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி