மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம்

61பார்த்தது
மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம்
திமுக அரசின் மின்கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்து மாநிலத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வருகிற (8. 10. 2024) செவ்வாய்க்கிழமை அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது அதற்கான ஆலோசனைக் கூட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற அலுவலகத்தில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் தலைமையில் இன்று(அக்.04) நடைபெற்றது.

உடன் மாவட்ட துணைச் செயலாளர் சாகுல்அமீத், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இளையராஜா மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பியரேஜான், வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு ஒன்றிய செயலாளர் வேங்கன், மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன், மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, நகரக் கழக செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சுவாமிநாதன், ஒன்றிய பொருளாளர் சேட்டுகுமார், மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி