ஊத்தங்கரை அருகே காட்டை அழித்து தனிநபர் சாலை அமைக்க முயற்சி

54பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கருமாண்டபதி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியாகவுண்டனூர் அருகே உள்ள காட்டை அழித்து தனிநபர் ரோடு போடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த காடு மத்தூர் ஒன்றியம் பாப்பாரப்பட்டி பாரஸ்டு அலுவலர்களும், ஊத்தங்கரை வருவாய் துறைக்கு சொந்தமான இந்த காட்டை கண்டு கொள்ளாமல் உள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நேரில் பார்வையிட்டு காட்டை அழித்து ஆக்கிரமிப்பு செய்யும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி