கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள புக்கசாகரம் அருகே தாசேபள்ளி தின்னா என்ற இடத்தில் ஓசூர் மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீ பிடித்துக்கொண்டது.
சிறிது நேரத்தில் நான்குபுறமும் தீ பரவியதால் தீ மள மளவென எரித்து, அந்த பகுதியே புகை மண்டல மாக காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் தீய ணைப்பு துறை வீரர்கள் அங்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.