போச்சம்பள்ளியில் ரூ. 30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

51பார்த்தது
போச்சம்பள்ளியில் ரூ. 30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நேற்று செப்-2ம் தேதி நடந்த கொப்பரை ஏலத்தில், போச்சம்பள்ளி. அரசம்பட்டி, புலியூர். பண்ணந்தூர், அசுரம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களிடம்உள்ள கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

கொப்பரை 1 கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ. 83 முதல் அதிகபட் சமாக ரூ. 130 வரையிலும். சராசரியாக ரூ. 118க்கும் ஏலம் போனது. மொத்தமாக 26 டன் கொப்பரை ரூ. 30 லட்சத்திற்கு ஏலம் போனது

தொடர்புடைய செய்தி