சாந்தப்பாடி மதுரைவீரன் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா.

78பார்த்தது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, சாந்தப்பாடி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார்,
ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ குட்டக்கார கருப்பசாமி மதுரவீரன் சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷே விழாவை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேகமாக யாக குண்டங்கள் அமைத்து, காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலசத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு, மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனித நீரை தலையில் சுமந்து, கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு, கோபுரா கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது.

பின்னர் கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்ற பின்னர் பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷே விழாவை காண அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி