குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழா; கலெக்டர் ஆலோசனை

79பார்த்தது
குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழா; கலெக்டர் ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சார்பில்  “குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழா” நிகழ்ச்சி நடைபெற உள்ளது.   இந்த விழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று (செப்.,30) ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார்.  

கூட்டத்தில் குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகள் குறித்த அறிக்கையை தயாரிக்க வேண்டுமெனவும், குமரி சங்கமம் நடைபெறும் இடத்தினை தயார் செய்தல், நிகழ்ச்சியில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தீயணைப்பு வாகனங்களுடன் மீட்பு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும்  நம் ஊரு திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திட வேண்டும். குறிப்பாக நமது மாவட்டத்திற்கு உரித்தான பாரம்பரிய கலைகளை இந்த நிகழ்வில் மேடையேற்றிடவும், பிரபலமான கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்திடவும், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணிம், உதவி இயக்குநர் கலைப்பண்பாட்டு துறை கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி