கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் ராமன்புதூர் பகுதியில் போலீசார் நேற்று(செப்.28) ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அங்குள்ள ஒரு டீக்கடையில் சோதனை நடத்தினர். சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 45 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளர் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி (வயது 55) என்பவரை கைது செய்தனர்.