இரணியல் அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் யூதா ரவி (52). கட்டிட காண்ட்ராக்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று ( 1 -ம் தேதி) மாலை நுள்ளிவிளையில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நுள்ளிவிளை பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது பைக் நிலை தடுமாறி அந்த வழியாக வந்த லாரி மீது மோதியது.
இதில் பைக்குடன் லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கிய யூதா ரவியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் யூதா ரவி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.