உத்திரமேரூரில் மாடு திருடியவர்கள் கைது

80பார்த்தது
உத்திரமேரூரில் மாடு திருடியவர்கள் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சடச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் 21; கால்நடை விவசாயி. இவருக்கு சொந்தமான இரண்டு பசு மாடுகள் மற்றும் வளத்தோடு கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு, 26; என்பவரது ஒரு பசு மாடும், சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் கொட்டகையில் இருந்து காணாமல் போனது.
இதுகுறித்து, இருவரும் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, உத்திரமேரூர் போலீசார், மாடு திருடிய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
உத்திரமேரூர் அடுத்த, மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரி, 46; மாட்டு இறைச்சி வியாபாரி என்பவரை சந்தேகத்தின்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், மாரி மற்றும் பாண்டவாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 24, காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மாடுகளை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து மாரி, விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிரகாஷை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி