பாலாற்று பழைய பாலத்தை சீர் செய்ய கலெக்டரிடம் மனு

78பார்த்தது
பாலாற்று பழைய பாலத்தை சீர் செய்ய கலெக்டரிடம் மனு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சி, சீத்தாவரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம், பாலாற்று பழைய பாலத்தை சீர் செய்ய வேண்டும் என மனு அளித்தார்.
மனுவில் கூறியுள்ளதாவது:

பழையசீவரம்- திருமுக்கூடல் பாலாற்றின் குறுக்கே, 15 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பேருந்துகள் இயக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் பயன்பாட்டிற்கும், விவசாய இடுப்பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவும் அமைக்கப்பட்டது.

ஆனால், சில ஆண்டுகளாக தினசரி இரவு, பகலாக தொடர்ந்து அதிக அளவிலான கனரக வாகனங்கள் லோடு ஏற்றி செல்கின்றன. இதனால், பாலம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் நிலையில் உள்ளது.
எனவே, பல ஆண்டுகளுக்கு முன் இப்பாலாற்றின் குறுக்கே அப்போதைய முதல்வர் அண்ணாதுரையால் திறக்கப்பட்ட பழைய பாலம் உள்ளது.

இந்த பாலத்தை குறிப்பிட்ட இடங்களில் சீர் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதில், கனரக வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். பாலத்தின் மீது லோடு வாகனங்களுக்கு தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி