மண்டல அளவிலான மென்பொருள் போட்டி

76பார்த்தது
மண்டல அளவிலான மென்பொருள் போட்டி
கள்ளக்குறிச்சி ஏ. கே. டி, பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மண்டல அளவிலான மென்பொருள் வடிவமைப்பு போட்டியில் சாதனை படைத்தனர்.

தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் டான்செம் நிறுவனம் நடத்திய மண்டல அளவிலான மென்பொருள் வடிவமைப்பு போட்டி கள்ளக்குறிச்சி ஏ. கே. டி. பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றன. புதிய தொழிலநுட்பமான 'இண்டஸ்ட்ரியல் 4. 0' துறையைச் சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பு போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் ஏ. கே. டி. நினைவு பாலிடெக்னிக் கல்லுாரி 'டூல்-டை' துறையைச் செர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சஞ்சய், ரோஹித் ஆகியோர் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றனர். இவர்களுக்கு 7, 500 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சாதனை படைத்து கல்லுாரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு கல்லுாரியில் நடந்த பாராட்டு விழாவில் ஏ. கே. டி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், மற்றும் கல்லுாரி முதல்வர் கபிலர், கல்லுாரி துறைத்தலைவர் ரஞ்சித்குமார் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி