ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு

69பார்த்தது
ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு
கள்ளக்குறிச்சியில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த ஆதார் சேவை மையத்தில் பெயர், முகவரில் உள்ள பிழைகளை சரிசெய்தல், புகைப்படம், போன் எண், விலாசம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதார் சேவைகளை பெறுவதற்கு கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் வருகின்றனர். அங்கு, இணையதளம் சரியாக கிடைக்கவில்லை என்பது உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், பொதுமக்கள் பல முறை வந்து செல்ல வேண்டிய நிலையும், வீண் பண செலவும் ஏற்படுகிறது. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தில் உள்ள பிரச்னையை சரிசெய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி