மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில், சங்கராபுரம் குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஆதித்யன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, காவல் நிலையத்தில் உள்ள அனைத்து பதிவேடுகள், சிறை ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து வழக்குகளின் விபரம் குறித்தும் விரைந்து முடிக்கும்படியும் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் விசாரணை செய்யவும் அறிவுறுத்தினார்.