தியாகதுருகம் வேளாண் துறை சார்பில் பொரசக்குறிச்சி கிராமத்தில் ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு மண் வளம் குறித்த பயிற்சி நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) வனிதா வரவேற்றார். கூட்டத்தில், மண் பரிசோதனை செய்வதன் அவசியம், தமிழ் மண்வளம், பயிர் காப்பீடு மற்றும் டி. எம். , கிசான் திட்டத்தில் இடையில் நிறுத்தப்பட்ட பயனாளி கள் தகுதி இருப்பின் மீண்டும் உதவி தொகை பெறுவது குறித்த வழிமுறைகளை இணை இயக்குனர் அசோக்குமார் எடுத்துரைத்தார்.
மக்காச்சோள சாகுபடியில் பயிர் பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். உதவி விதை அலுவலர் ஞானவேல், கண்காணிப்பாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் வரத ராஜன், ஆத்மா திட்ட பணியாளர்கள் ரவி, கலைவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.