கள்ளக்குறிச்சி: நிகழ்விடத்திலேயே பலி

3377பார்த்தது
கள்ளக்குறிச்சி: நிகழ்விடத்திலேயே பலி
கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன், 60; அதே பகுதியைச் சேர்ந்தவர் இருசன் மனைவி பாஞ்சாலை, 60; இருவரும் நேற்று முன்தினம் இரவு 10: 30 மணியளவில் குதிரைச்சந்தல் சாலையில் நடந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் மணிகண்டன், 27; ஓட்டி வந்த பைக் சின்னபையன் மற்றும் பாஞ்சாலை ஆகியோர் மீது மோதியது.

இதில் சின்னபையன் சம்பவம் இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த பாஞ்சாலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி