ஹைதராபாத் vs ராஜஸ்தான் - இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?

62பார்த்தது
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 24) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும். தற்போது கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 17 புள்ளிகளுடன் ஹைதராபாத் இரண்டாமிடத்திலும், 17 புள்ளிகளுடன் ராஜஸ்தான் மூன்றாமிடத்திலும் உள்ளன.