உயிர் காக்கும் தெய்வங்கள்..! தேசிய மருத்துவர்கள் தினம் இன்று

83பார்த்தது
உயிர் காக்கும் தெய்வங்கள்..! தேசிய மருத்துவர்கள் தினம் இன்று
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. புகழ் பெற்ற மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராயின் பிறந்த நாளில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் பி.சி.ராய் எண்ணற்ற நபர்களுக்கு சேவை செய்வதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது நினைவாக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமானதாகும்.