பொறியியல் மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிப்பு!

50பார்த்தது
பொறியியல் மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிப்பு!
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூன் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6-ம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்காக கூடுதல் அவகாசம் அளித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 5-ம் தேதி பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது. இதுவரை 2,49,918 மாணாக்கர்கள் விண்ணப்பித்துள்ளனர்.