ஈரோட்டில் பழுதடைந்த குடிநீர் குழாயை மாற்றி, புதிய குழாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பொருத்தினர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக பதிக்கப்பட்ட பெரும்பாலான குடிநீர் குழாய்களில், ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் அழுத்தம் ஏற்பட்டு, பழைய குழாய்கள், ஆங்காங்கே பழுதடைந்து வருகிறது. இதனால், முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்நிலையில், பழுதடைந்த குழாய்களை கண்டறிந்து அதற்கு பதிலாக புதிய குழாய்களை, மாநகராட்சி அதிகாரிகள் பொருத்தி வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாநகராட்சி 28வது வார்டுக்கு உட்பட்ட முனிசிபல் காலனியில், பழுதடைந்த பழைய குழாய்க்கு பதிலாக புதிய குழாய்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று(செப்.19) பொருத்தினர். இதனிடையே, மாணிக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.