ஈரோடு: மறுவாழ்வு முகாமில் முதியவர் தற்கொலை

84பார்த்தது
ஈரோடு: மறுவாழ்வு முகாமில் முதியவர் தற்கொலை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் ஜெகநாதன் (84). இவரது மனைவி தெரசம்மா (79). இவர்களுக்கு இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜெகநாதனும் அவரது மனைவியும் இளைய மகள் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெகநாதனுக்கு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அடிக்கடி எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று ஜெகநாதன் கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் ஜெகநாதனின் இளைய மகளும், மருமகளும் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டனர். வீட்டில் ஜெகநாதனும் அவரது மனைவி மட்டும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி வீட்டில் தூங்கி விட்டார். ஜெகநாதன் வீட்டின் வெளியே தூங்கினார்.

இந்நிலையில் நேற்று காலை ஜெகநாதன் மனைவி எழுந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே உள்ள மரத்தில் ஜெகநாதன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெகநாதனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே ஜெகநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி