ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று (அக் 3) நடந்தது.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், மதுரை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து, 6, 000 ரூபாய் முதல், 22,000 ரூபாய் வரை, 50 கன்றுகள், 20, 000 ரூபாய் முதல், 68, 000 ரூபாய் வரை, 250 எருமை மாடுகள், 22, 000 ரூபாய் முதல், 80, 000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 80, 000 ரூபாய்க்கு மேலான விலையில் மாடுகளை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா மாநில வியாபாரிகள், விவசாயிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்தனர். பெரும்பாலான மாநிலங்களில் தற்போது குறைந்த அளவே மழை பெய்து வருவதால், மாடுகளை வாங்குவதில் ஆர்வம் குறைந்து காணப்பட்டது. வரத்தான கால்நடைகளில், 80 சதவீதம் விற்பனையாகின.