முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மே 12) தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், அதிமுக தொண்டர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். தொடர்ந்து சேலத்தில் இருக்கும் எடப்பாடியின் வீட்டின் முன்பு எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை ஒட்டி, நிர்வாகிகள் சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது. இதனை, அதிமுக தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர்.