புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை அழித்த டிரைவர் (வீடியோ)

56பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம், ஹாபூர் மாவட்டத்தில் டெல்லி - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சாஜர்சி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இன்று(ஜூன் 11) காலை அந்த வழியாக புல்டோசரில் வந்த ஒருவரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த ஓட்டுநர், புல்டோசரைக் கொண்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும், சுங்கச்சாவடி மீது மோதியும் சேதப்படுத்தினார். இதை வீடியோவாக எடுத்த சுங்கச்சாவடி ஊழியர்கள், இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி