பழனி அடுத்த மடத்துக்குளத்தில் இன்று அதிகாலை காரும் வேனும் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த தியாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி, மகன் ஜெயப்பிரியன் தாயார் மனோன்மணி ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். துக்க நிகழ்ச்சிக்காக கிணத்துக்கடவு சென்று விட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துயர சம்பவத்தால்
பழனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது