ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய சுற்றுச்சுவர்கள் முழுவதும் வால்போஸ்டர்கள், நோட்டீஸ்கள் எச்சில் கறைகளுடன் காண்பதற்கே அருவருக்கத் தக்க வகையில் காணப்பட்டது. இதனால் பயணிகள் முகம் சுளித்தபடி சென்றனர். தற்போது சுற்றுச்சுவர் துாய்மையே சேவை 2024 திட்டத்தின் கீழ் வண்ண ஓவியங்கள் துாய்மையை பறைசாற்றும் வகையில் வரையப்பட்டு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. வண்ண ஓவியங்களின் அழகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.