திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த மகளிர் சுய உதவி குழுவாக, திண்டுக்கல் ஆர். வி நகர் கற்பகம், ஜெனிபர் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அந்த குழுவினருக்கு விருது வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.