கிணற்றில் தடுமாறி விழுந்து ஜல்லிகட்டு காளை பலி!

76பார்த்தது
கிணற்றில் தடுமாறி விழுந்து ஜல்லிகட்டு காளை பலி!
திண்டுக்கல் அருகே தவசிமடையில் பிப். 18ஆம் தேதி(ஞாயிற்றுகிழமை) ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. கொண்டது. இந்த நிலையில் மதுரை அண்டாம்பட்டியைச் சேர்ந்த வினோத் என்பவரின் காளை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றது. பின்னர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய காளை அந்த பகுதியில் உள்ள தோட்டத்துப் பகுதிகளுக்குள் சென்றது. இதை யடுத்து மாட்டின் உரிமையாளர் காளையை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை வேலம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்து பகுதியில் காளை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்த உரிமையாளர் வினோத் அவரது துண்டை அசைத்து கூப்பிட்டார். அதை பார்த்து ஓடி வந்த காளை சுமார் 80 அடி ஆழம் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தடுமாறி கீழே விழுந்தது. இதையடுத்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறந்த காளையை உடலை மீட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர் கண்முன்னே தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி