இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று அக்டோபர் 01 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை களையும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக் கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், நாளை மறுநாள் (3ம்தேதி) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.