நாமக்கல் மாவட்டம் பவித்திரம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் பழனிசாமி இவர் நேற்று (செப்டம்பர் 27 இரவு சுமார் 8 மணியளவில், ஓசூரில் இருந்து நாமக்கல் நோக்கி சரக்கு லாரியை ஓட்டி வந்துள்ளார். பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் லாரியை நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக செல்போன் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது பெங்களுருவில் இருந்து திருச்செங்கோடு நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார், பழனிசாமி மீது மோதியது, இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சொகுசு காரை ஓட்டிவந்த திருச்செங்கோட்டை சேர்ந்த தினேஷ் படுகாயமடைந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு காவல்துறையினர் லாரி டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தினேசை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.