பாலக்கோடு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்

54பார்த்தது
பாலக்கோடு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமனியன், டிஎஸ்பி மனோகரன் ஆகியோர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் அக்டோபர் 05 நேற்று மாலை நடைப்பெற்றது. குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், வணிகர்களும், பொதுமக்களும், தங்கள் கடைகள் மற்றும் வீடுகளில் 3-வது கண் எனப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இது நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாலக்கோடு சுற்றுவட்டார வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி